"இன்ஷால்லாஹ்'' இன்னும் சில நாட்களில் உங்களுக்கு இங்கே ஒரு செய்தி காத்திருக்கிறது
KAJ
K.Abdul Jabbar
Monday, July 12, 2010
மத நல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடும் செயல் அதிகரிப்பு தவ்ஹீத் ஜமாத் மீது பள்ளி தாளாளர் புகார்
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மாணவர்களை அழைத்து சென்று மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுவதாக கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகீம் புகார் செய்துள்ளார். அவர் கூறியதாவது; அனைத்து சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக 1981ம் ஆண்டு முதல் கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1500 மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை கீழக்கரையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் அழைத்துச் சென்று மூளை சலவை செய்து மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுகின்றனர்.முஸ்லிம் மாணவர்கள் தாடி வளர்த்து, தொப்பி அணிந்து பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். மதநல்லிணக்கத்துடன் இயங்கி வரும் பள்ளியில் இவர்களின் குறுக்கீடு காரணமாக மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாலிபான் இயக்கம் போல் செயல்பட்டு மாணவர்களை பெற்றோர்களுக்கு எதிராக செயல்படவும், பள்ளிக்கு எதிராக கிளர்ச்சி செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த 8ம் தேதி பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் பள்ளி முதல்வரை தரக்குறைவாக பேசி அலுவலக பணியாளர்களை மிரட்டி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக முதல்வர்,கலெக்டர்,எஸ்.பி.,ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment