KAJ Educational Trust
"இன்ஷால்லாஹ்'' இன்னும் சில நாட்களில் உங்களுக்கு இங்கே ஒரு செய்தி காத்திருக்கிறது
KAJ
K.Abdul Jabbar
Monday, July 12, 2010
கீழக்கரையில் தரமில்லாத மின் கம்பிகள் வீடுகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை
கீழக்கரையில் உள்ள மின் பாதையில் செல்லும் தரமில்லாத மின் கம்பி காரணமாக வீடுகளுக்கு குறைந்தழுத்த மின் சப்ளை கிடைப்பதால் மக்கள் அவதியடைகின்றனர். கீழக்கரையில் ஆயிரக்கணக்கன மின் இணைப்புகள் உள்ளன.இங்குள்ள துணை மின் நிலையம் பெயரளவில் உள்ளதே தவிர, கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. தரமில்லாத கம்பிகளால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். சீரான அழுத்தம் கிடைக் காததால் மின் சாதன பொருட்களை வீடுகளில் பயன்படுத்த மக்கள் அச்சமடைகின்றனர்.மின் விசிறிகள் குறைந்த வேகத்தில் சுழல்வதால் இரவு நேரங்களில் குழந் தைகள் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர்.இப்பிரச்னையை தீர்ப்பதில் மின் வாரிய அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து வருகின்றனர். மின் கம்பங்களில் உள்ள வயர்கள் சிலந்தி கூடு போல் காணப்படுகிறது. சீதக்காதி சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் தூண்களில் சிமென்ட் அரிக்கப் பட்டு அபாய நிலையில் உள்ளது. தெருக்களில் உள்ள பல மின் கம்பங்கள் சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.தாமதமாக பணம் செலுத்தினால் ஆர்வத்துடன் அபராதம் வசூலிக்கும் மின்சார துறை ,மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கவும் அக்கறை செலுத்த வேண்டும்.
மத நல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடும் செயல் அதிகரிப்பு தவ்ஹீத் ஜமாத் மீது பள்ளி தாளாளர் புகார்
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மாணவர்களை அழைத்து சென்று மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுவதாக கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகீம் புகார் செய்துள்ளார். அவர் கூறியதாவது; அனைத்து சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக 1981ம் ஆண்டு முதல் கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1500 மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை கீழக்கரையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் அழைத்துச் சென்று மூளை சலவை செய்து மதநல்லிணக்கத்திற்கு எதிராக தூண்டி விடுகின்றனர்.முஸ்லிம் மாணவர்கள் தாடி வளர்த்து, தொப்பி அணிந்து பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். மதநல்லிணக்கத்துடன் இயங்கி வரும் பள்ளியில் இவர்களின் குறுக்கீடு காரணமாக மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாலிபான் இயக்கம் போல் செயல்பட்டு மாணவர்களை பெற்றோர்களுக்கு எதிராக செயல்படவும், பள்ளிக்கு எதிராக கிளர்ச்சி செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த 8ம் தேதி பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் பள்ளி முதல்வரை தரக்குறைவாக பேசி அலுவலக பணியாளர்களை மிரட்டி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக முதல்வர்,கலெக்டர்,எஸ்.பி.,ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
Wednesday, July 7, 2010
கீழக்கரை மின்கம்பியில் தீ
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்கம்பியில் நேற்று பகல் திடீரென மின்பொறி ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கீழக்கரையில் டிரான்ஸ் பார்ம் மற்றும் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வியாபாரிகள் என பலரும் அவதியடைகின்றனர். இந்நிலையில் நேற்று பகல் வள்ளல் சீதக்காதி சாலை மின்கம்பியில் தீ பொறி உருவானது.இதை கண்ட பெண்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். 15 நிமிடங்களுக்கு பின் மின் ஊழியர் வந்து டிரான்ஸ்பார்மை ஆப் செய்தததால் அப்பகுதி மக்கள் பெருமூச்சுவிட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
Sunday, July 4, 2010
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலி கீழக்கரையில் குடம் குடிநீர் நான்கு ரூபாய்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக கீழக்கரையில் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் நான்கு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் நீரிலும் உப்பு தன்மை அதிகரித்து சுவை குறைந்துள்ளது.இதை தொடர்ந்து உச்சிப்புளி,இருமேனி,பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் லாரியில் நீர் எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வரை குடம் 3.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 காசு அதிகரிக்கப்பட்டு நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் லாரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பல்வேறு கிராமங்களில் தேவையற்ற இடங்களில் குளங்கள் வெட்டப்பட்டு அரசின் நிதியை பாழாக்குவதை தவிர்த்து, சுத்தம் செய்யப்படாமல்,மூடப்படாத நிலையில் உள்ள குடிநீர் கிணறுகளை தூர் வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 166 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள உள்ள காவிரி நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும்.மாவட்ட நிர்வாகமும் கீழக்கரை மக்களின் குடிநீர் சிரமத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Wednesday, June 30, 2010
திருட்டு வழக்கில் 468 பவுன் நகை மீட்பு இருவர் கைது;5 பேர் தலைமறைவு
ராமநாதபுரம் டாக்டர் வீட்டில் நடந்த "மெகா' திருட்டு சம்பவத்தில், 468 பவுன் நகை மீட்கப்பட்டது. இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ,ஐந்து பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் சேட் இப்ராஹிம் நகரில் வசித்து வரும் டாக்டர் கியாவுதீன் மகள் அகமது பசிகா வீட்டில், கடந்த 2009 அக்.,22 இரவில் 500 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஓடப்பட்டி கணேசன் உறவினர் பாரத்குமாரை கைது செய்து ,அவரிடமிருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவரது தகவல்படி ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை சேர்ந்த முகமது அனீஸ்(28) என்பவரை விசாரித்ததில் ,தெற்குத்தரவை வடக்குத்தெருவை சேர்ந்த பரீத் அகமது, பால்கரையை சேர்ந்த தொப்பி ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து 415 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் டாக்டர் கியாவுதீன் மகள் வீட்டில் திருடப்பட்டது .
பிரதீப்குமார் எஸ்.பி., கூறியதாவது: பெரிய அளவில் நடந்த திருட்டு என்பதால் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையை நாங்கள் வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட அளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் குற்றவாளிகளாக உள்ளனர். பாரத்குமார், அனீஸ் தவிர மற்றவர்களை தேடிவருகிறோம், என்றார்.
ரூ.100க்கு ஒரு பவுன்: எதிர்பாராத விதமாக சிக்கிய இந்த நகைகளின் எண்ணிக்கை அனீஷிற்கு மிதப்பை தந்தது. எதற்கெடுத்தாலும் நகைகளை எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். பெண்களிடம் பந்தா செய்வதற்காக ஒரு பவுன் நகையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவமும் நடந்துள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட நகையை பயன்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
விபத்தால் தகர்ந்த அடுத்த "டார்க்கெட்': டாக்டர் வீட்டில் கிடைத்த நகையால் , பெரிய திருட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும் என முடிவு செய்த அனிஷின் அடுத்த டார்கெட், ராமநாதபுரம் "தங்கமயில்' ஜூவல்லரியாக இருந்தது. நத்தத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற போது, சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது.இதனால் அவனது "டார்க்கெட்' தாமதமானது.

செய்யது ஹமீதா கல்லூரியில் ராகிங் தடுப்பு கமிட்டி கூட்டம்
கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்கை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டதின் படி, காரைக்குடி அழகப்பா பல்கலை கழகம் உத்தரவை தொடர்ந்து, கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரியில் 42 பேர் கொண்ட ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. முதல்வர் அபுல் ஹசன் சாதலி பேசியதாவது: கல்லூரியில் ராகிங் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது குறித்து விசாரிக்கவும்,தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பேராசிரியர், போலீஸ் உள்ளிட்ட பல குழு கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, என்றார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரை, பி.ஏ.டி.,அமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தானம்,மாயாகுளம் ஊராட்சி தலைவர்(பொறுப்பு) சிவா,மாணவர்கள் சஹிர்தீன்,பாரதி கண்ணன் மற்றும் பலர் பேசினர் .பேராசிரியர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.
கீழக்கரையில் போக்குவரத்து ஸ்டேஷன் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது.ஆணையாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வரி மற்றும் வரியற்றஇனங்கள் கேட்பு,வசூல்,நிலுவை விபரம் வாசிக்கப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நவீன ல் கணினி மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பணியாளர் நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மணல்,ஜல்லி, செங்கல் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைமை எழுத்தர் மதிவாணன் நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)