ராமநாதபுரம் டாக்டர் வீட்டில் நடந்த "மெகா' திருட்டு சம்பவத்தில், 468 பவுன் நகை மீட்கப்பட்டது. இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ,ஐந்து பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் சேட் இப்ராஹிம் நகரில் வசித்து வரும் டாக்டர் கியாவுதீன் மகள் அகமது பசிகா வீட்டில், கடந்த 2009 அக்.,22 இரவில் 500 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஓடப்பட்டி கணேசன் உறவினர் பாரத்குமாரை கைது செய்து ,அவரிடமிருந்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவரது தகவல்படி ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை சேர்ந்த முகமது அனீஸ்(28) என்பவரை விசாரித்ததில் ,தெற்குத்தரவை வடக்குத்தெருவை சேர்ந்த பரீத் அகமது, பால்கரையை சேர்ந்த தொப்பி ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து 415 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் டாக்டர் கியாவுதீன் மகள் வீட்டில் திருடப்பட்டது .
பிரதீப்குமார் எஸ்.பி., கூறியதாவது: பெரிய அளவில் நடந்த திருட்டு என்பதால் இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையை நாங்கள் வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட அளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு பேர் குற்றவாளிகளாக உள்ளனர். பாரத்குமார், அனீஸ் தவிர மற்றவர்களை தேடிவருகிறோம், என்றார்.
ரூ.100க்கு ஒரு பவுன்: எதிர்பாராத விதமாக சிக்கிய இந்த நகைகளின் எண்ணிக்கை அனீஷிற்கு மிதப்பை தந்தது. எதற்கெடுத்தாலும் நகைகளை எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார். பெண்களிடம் பந்தா செய்வதற்காக ஒரு பவுன் நகையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவமும் நடந்துள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட நகையை பயன்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
விபத்தால் தகர்ந்த அடுத்த "டார்க்கெட்': டாக்டர் வீட்டில் கிடைத்த நகையால் , பெரிய திருட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும் என முடிவு செய்த அனிஷின் அடுத்த டார்கெட், ராமநாதபுரம் "தங்கமயில்' ஜூவல்லரியாக இருந்தது. நத்தத்தில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற போது, சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது.இதனால் அவனது "டார்க்கெட்' தாமதமானது.
"இன்ஷால்லாஹ்'' இன்னும் சில நாட்களில் உங்களுக்கு இங்கே ஒரு செய்தி காத்திருக்கிறது
KAJ
K.Abdul Jabbar
Wednesday, June 30, 2010
செய்யது ஹமீதா கல்லூரியில் ராகிங் தடுப்பு கமிட்டி கூட்டம்
கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்கை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டதின் படி, காரைக்குடி அழகப்பா பல்கலை கழகம் உத்தரவை தொடர்ந்து, கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரியில் 42 பேர் கொண்ட ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. முதல்வர் அபுல் ஹசன் சாதலி பேசியதாவது: கல்லூரியில் ராகிங் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது குறித்து விசாரிக்கவும்,தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பேராசிரியர், போலீஸ் உள்ளிட்ட பல குழு கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது, என்றார். பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தங்கதுரை, பி.ஏ.டி.,அமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தானம்,மாயாகுளம் ஊராட்சி தலைவர்(பொறுப்பு) சிவா,மாணவர்கள் சஹிர்தீன்,பாரதி கண்ணன் மற்றும் பலர் பேசினர் .பேராசிரியர் அப்துல் சத்தார் நன்றி கூறினார்.
கீழக்கரையில் போக்குவரத்து ஸ்டேஷன் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது.ஆணையாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வரி மற்றும் வரியற்றஇனங்கள் கேட்பு,வசூல்,நிலுவை விபரம் வாசிக்கப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நவீன ல் கணினி மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பணியாளர் நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மணல்,ஜல்லி, செங்கல் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைமை எழுத்தர் மதிவாணன் நன்றி கூறினார்.
Tuesday, June 29, 2010
கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் திருப்புல்லாணிக்கு மாற்ற முடிவு : மக்கள் அதிர்ச்சி
கீழக்கரை: கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகத்தை திருப்புல் லாணிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். கீழக்கரையில் 1994 ஜன., 17ம் தேதி டி.எஸ்.பி.,அலுவலகம் துவங்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கீழக்கரை, திருப்புல் லாணி, ஏர்வாடி, திருஉத்தரகோசமங்கை, சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம் ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன்களின் தலைமையிடமாக விளங்கி வருகிறது. இந்த பகுதி மக்களின் மையப் பகுதியாக கீழக்கரை விளங்குவதால் மக்கள், வழக்கு, புகார் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு எளிதாக டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து சென்றனர்.நடப்பாண்டில் கீழக் கரை தாலுகாவாக மாற்றப் பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளதால் பல்வேறு அரசு அலுவலகங்களை மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந் நிலையில் டி.எஸ்.பி., புதிய அலுவலகம் கட்ட கீழக்கரையில் இடம் கிடைக்காதால் திருப்புல்லாணிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. போலீஸ் தரப்பில் கூறியதாவது: கீழக்கரையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் டி.எஸ்.பி., அலுவலகம் போதுமான வசதிகள் இல்லாததால் தொடர்ந்து இயங்கமுடியாத நிலை உள்ளது. திருப்புல்லாணியில் கட்டடம் கட்ட தேவையான நிலம் உள்ளதால், அங்கு டி.எஸ்.பி., அலுவலகம் கட்டுவதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது, என்றனர்.
Thursday, June 24, 2010
தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா
கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. மாணவி பாத்திமா கிராத் ஓதினார். பேரவையின் ஆலோசகர் தாஜ்நிஸா பேகம் வரவேற்றார். மாணவியர் பேரவையின் புதிய நிர்வாகிகள் தலைவி ரபியா மகுசூமா தலைமையில் உறுதி மொழி எடுத்தனர். தலைவராக ரபியா மகுசூமா, உதவி தலைவராக பரீதாபானு,பொதுசெயலாளராக அகமது முஹ்பிதா, இணை செயலாளராக ஹூசைனியா, துறை செயலாளர்களாக குத்புசியா பேகம், திவ்னம்மாள், அமீரா ஹாஜா, அனீஸ் பாத்திமா, ஷிபானா, சிந்து பிரியா, சகானா பாத்திமா, முகம்மது ஹஸிபா, சுபா, சாலிஹா பாத்திமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதயம் குரூப் ஆப் கம்பெனிஸ் சி.இ.ஓ., முத்து மாணவிகளின் கல்வி முன்னேற்றத் திற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
Saturday, June 19, 2010
நோட்டு,புத்தகம்வழங்கும் விழா
கீழக்கரை மக்கள் சேவை இயக்கத்தின்(KWAT) சார்பில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம் வழங்கும் விழா சங்க கட்டடத்தில் நடந்தது.கீழக்கரையில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் ஏராளமான மாணவ,மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் பஷீர் அகமது,இன்ஸ்பெக்டர் சங்கு ஆகியோர் நோட்டு,புத்தகம் வழங்கி பேசினர். சங்க தலைவர் ஜமால் காதர்,செயலாளர் இஸ்மாயில்,ஹம்ரூன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்தரங்கு
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு,மின்னணுவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மையம் சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவ, மாணவிகளுக்கு "மொட்டிவேசன் டுவாட்ஸ் சக்ஸஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்து பேசினார்.வேலை வாய்ப்பு துறை அதிகாரி சேக்தாவுத் வரவேற்றார். மின்னணுவியல்,தொடர்பியல்துறையில் உள்ள முன்னேற்றங்கள், மற்றும் ஆளுமைத்திறன் பற்றிய விளக்கங்களை திருச்சி சேப் அகடாமி பயிற்சியாளர் சுந்தரம் கூறினார். ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை தலைவர் சேக்தாவுத் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்
Subscribe to:
Posts (Atom)