KAJ

KAJ
K.Abdul Jabbar

Thursday, June 17, 2010

சமச்சீர் கல்வி புத்தகம் இல்லை பாடங்கள் துவங்குவதில் தாமதம்

கீழக்கரை பகுதியில் உள்ள சில நர்சரி,பிரைமரி பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் கிடைக்காததால் பாடங்கள் துவங்க தாமதமாகிறது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே வகையான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத் தில் சமச்சீர் கல்வி அரசால் கொண்டு வரப்பட்டது. நடப்பாண்டில் பள்ளி திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கீழக்கரை அருகே உள்ள சில நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு சமச்சீர் புத்தகம் வழங்கப்படவில்லை.இதனால் பாடங்கள் துவங்க முடியாத நிலை உள்ளது.
இந்த புத்தகங்கள் மானாமதுரை சிப்காட்டில் உள்ள பாடநூல் கழகத்தில் வினியோகம் செய்யப் படுகிறது. சமச்சீர் கல்வி புத்தகத்திற்கான அரசு நிர்ணயித்த தொகையை டிராப்ட் எடுத்து ,உதவி தொடக்க கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் மானாமதுரை சென்றால் அங்கு புத்தகம் கையிருப்பு இல்லை என கூறுகின்றனர்.இதனால் நேரவிரையம், மனஉளைச்சல் ஏற்பட்டு ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
திருப்புல்லாணி ஏ.இ.ஓ.,கதிரேசன் கூறியதாவது: சமச்சீர் கல்வி புத்தகம் கிடைக்கவில்லை என எவ்வித புகார்களும் நர்சரி,பிரைமரி பள்ளிகளிலிருந்து வரவில்லை. கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தால் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

No comments:

Post a Comment