கீழக்கரையில் சைரன் ஒலியுடன் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட்டுள்ளதால் திருடர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.
கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வீடுகளை பூட்டிவிட்டு சென்று விட்டதால், உள்ளுரில் உள்ள சமூக விரோதிகளின் தகவல்களை வைத்து வெளியூர் திருடர்கள் கைவரிசை காட்டி வந்தனர்.ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சங்கு தலைமையில் போலீசார் நாள்தோறும் இரவு ரோந்து பணியில் மும்முரமாக உள்ளனர். ரோந்தின் போது போலீஸ் வாகனத்தில் உள்ள சைரனை ஒலித்தபடி செல்கின்றனர்.இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நீங்கியுள்ளது.தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் உத்தரவின் படி பஸ்ஸ்டாண்ட்,மார்க்கெட் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தையும் தனிப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்
No comments:
Post a Comment